ஜனாதிபதிக்கே தெரியாமல் அறிமுகமான புதிய வரிகள் - உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிறாரா அநுர..!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உரைகளை யார் எழுதிக் கொடுக்கின்றார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, ஜனாதிபதி அண்மையில் ஆற்றிய உரையில் வரி தொடர்பான தவறான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிதாக எந்தவொரு வரியும் அறிமுகப்படுத்தப்படவில்லை எனக் கூறுவது தவறானது. நிதிக் குழுவின் தலைவர் என்ற வகையில், அரசாங்கம் எவ்வாறு வரிகளை விதிக்கின்றது என்பது தமக்கு நன்கு தெரியும்.
புதிய வரிகள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் விதித்த வரிகள் தொடர்பில் தமக்கு முழுமையான புரிதல் உள்ளது, இதற்கு முன்னர் இல்லாத புதிய வரிகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளுக்கான வரியை இந்த அரசாங்கமே அறிமுகப்படுத்தியது.
அதேபோன்று, இலத்திரனியல் வாகனங்களுக்கான வரிகளும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் உரைகளை யார் எழுதிக் கொடுக்கின்றார்கள் என்பது தமக்குப் புரியவில்லை, அவர் பகிரும் பொழுது பிழையான கருத்துக்கள் இருப்பது கண்டறியக்கூடியதாக உள்ளது என்றார்.
பௌத்த மதத்திற்கே அவமானம்..! அரசியல்வாதிகளின் கைக்கூலியாகச் செயற்படும் தேரர்கள் மீது ராகுல தேரர் சீற்றம்
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan