பறிபோகும் நிலையில் ஸ்டார்மரின் பதவி.. அடுத்த பிரதமர் யார்!
அண்மைக்காலமாக பிரித்தானிய அரசாங்கத்தில் அதன் பிரதமர் பதவி ஒரு குழப்பநிலையை எதிர்நோக்கி வருகின்றது எனலாம்.
இந்நிலையில், தற்போதைய பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரின் பதவி விரைவில் பறிக்கப்படும் எனவும் அப்பதவிக்கு அடுத்த வரப்பபோவது யார் எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
புலம்பெயர்தல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை சரியாக கையாளவில்லை என்னும் நோக்கில் பிரித்தானிய மக்கள் கன்சர்வேட்டிவ் கட்சியிடமிருந்த லேபர் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்ததாக கூறப்படுகின்றது.
சிறப்பான ஆட்சி
இருப்பினும், லேபர் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மராலும் அந்த பிரச்சினைகளை சரியாக கையாள முடியவில்லை எனவும், ஸ்டார்மரை விட யாரால் நாட்டை சிறப்பாக ஆளமுடியும் என்னும் ஒரு கேள்வி எழுந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஸ்டார்மரால் திறம்பட செயல்பட முடியவில்லை என்பதால், அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்குவது குறித்த மக்கள் நினைப்பதாக தொடர்ந்து பேசப்படுகின்றது.
இதற்கிடையில் ஸ்டார்மர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், அவருக்கு பதிலாக யார் பிரதமராவார், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக யாரால் திறம்பட செயல்படமுடியும் என்பது குறித்த சில கணிப்புகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
அதேவேளை, பிரித்தானிய துணை பிரதமராக பொறுப்பு வகித்த ஏஞ்சலா ரெய்னர் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று தனது பதவியில் இருந்து விலகினார்.
தொடரும் சர்ச்சைகள்
ஆனால், பதவியில் இல்லாமலிருந்த காலகட்டத்தை, அவர் தன்னை மீண்டும் தயார் செய்துகொள்ளும் ஒரு காலகட்டமாக பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது.

எனவே, ஸ்டார்மர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படும் நிலையில், ஏஞ்சலா பிரதமராகலாம் என கணிக்கப்படுகிறது.ஏற்கனவே, பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரின் பதவியைக் கவிழ்க்க சதி நடப்பதாகவும், அதன் பின்னணியில் சுகாதாரத்துறைச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) இருப்பதாகவும் பிரதமரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள்.
அவர் அதை மறுத்தாலும், அண்மைய கருத்துக்கணிப்புகளில் வெஸ்சுக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. ஆக, அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் வெஸ் பெயரும் உள்ளதை மறுப்பதற்கில்லை.
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri