பிரான்ஸ் பிரதமர் தெரிவு விரைவில் : கட்சித் தலைவர்களை சந்திக்கும் மேக்ரோன்
பிரான்ஸ்(France) நாட்டின் அடுத்த பிரதமரை முடிவு செய்வதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் (Emmanuel Macron) இடதுசாரி, நடுநிலை மற்றும் வலதுசாரிக் கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பானது இன்று(23) இடம்பெறவுள்ளது.
புதிய மக்கள் முன்னணி (NFP) கட்சி, தனது கட்சியைச் சார்ந்த லூசி காஸ்டெட்ஸை (Lucie Castets) பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது.
ஊடகங்கள்
பிரான்சின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு, சேவியர் பெர்ட்ராண்ட்(Xavier Bertrand) ,பெர்னார்ட் காசெனியூவ்( Bernard Cazeveuve) ஆகியோருக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஊடகங்கள்,கரீம் பௌம்ரானே (Karim Bouamrane) என்னும் பாரிஸ் புறநகர் மேயருக்கும் பிரதமராக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கூடிய விரைவில் பிரான்ஸூக்கான பிரதமர் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam