பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!
ஹோமாகம பகுதியில் உயிரிழந்த நபர் ஒருவரை அடையாளம் காண, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் சராசரியாக 05 அடி 02 அங்குல உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாடு
எனினும் சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு 01.10.2024 அன்று முறைப்பாடு கிடைத்துள்ளது.
உயிரிழந்த நபர் தொடர்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டு, நீதவான் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தொலைபேசி இலக்கங்கள்
இதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 0718 591 655
ஹோமாகம பொலிஸ் நிலையம் - 0112855222
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam