இலங்கையில் உலங்கு வானூர்தி கொள்வனவு செய்த அரிசி வர்த்தகர் யார்?
அண்மையில் உலங்கு வானூர்தி கொள்வனவு செய்த பொலநறுவை அரிசி வர்த்தகர் தான் என ரத்ன அரிசி வர்த்தகர் மித்ரபால லங்கேஷ்வர தெரிவித்துள்ளார்.
இணையத்தள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் உள்ளூர் விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனிப்பட்ட விமானம் ஒன்றும் உலங்கு வானூர்தி சிலவற்றையும கொள்வனவு செய்வதற்கு தான் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணத்தில் இந்த உலங்கு வானூர்தி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் அரிசியில் இரசாயணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் எதிர்வரும் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
