“ஒமிக்ரோன்” வேகமான பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை
புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு ஒமிக்ரோன் (Omicron)முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகம் முழுவதும் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO)எச்சரித்துள்ளது.
77 நாடுகளில் பெரிதும் மாற்றமடைந்த ஒமிக்ரோன் மாறுபாட்டின் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு கண்டறியப்படாத பலர் சமூகங்களில் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளார்
எனவே, அதிக எண்ணிக்கையிலான தொற்றுக்கள், ஆயத்தமில்லாத சுகாதார அமைப்புகளை மீண்டும் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓமிக்ரான் மாறுபாடு முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் நவம்பர் மாதம் அடையாளம் காணப்பட்டது,
ஓமிக்ரான் தோன்றியதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவையும் அதன் அண்டை நாடுகளையும் பாதிக்கும் பயணத் தடைகளை பல நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ளன,
எனினும் தொற்று உலகம் முழுவதும் பரவுவதை தடுக்கமுடியவில்லை்.
இந்தநிலையில் சில நாடுகள் ஒமிக்ரோன் Omicron தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன.
எனினும் இதிலும் நாடுகள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாக டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் குறிப்பிட்டுள்ளார்.