வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் கைது
இலங்கை கடற்படையினர் மட்டக்களப்புக்கு அப்பால் கடலில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களை கைது செய்துள்ளனர்.
ஆழ்கடல் மீன்பிடி படகுடன் 85 பேர் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்தனர் என சந்தேகிக்கப்படும் 85 பேரை கைது செய்துள்ளதுடன் அவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை ஆழ்கடல் மீன்பிடி படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
படகினை செலுத்திச் சென்றவர்களுடன் 18 வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய 60 ஆண்கள்,14 பெண்கள், 18வயதுக்கும் குறைந்த 11 சிறார்களுடன் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்காக அவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் இலங்கையர்கள்

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் இவ்வாறு பலர் சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்கு சென்றனர். போருக்கு பின்னர் அவ்வாறு சட்டவிரோதமாக செல்வது குறைந்து காணப்பட்டது.
எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri