சுசிலின் பதவி பறிப்பின் பின்னணியில் நடந்தது? திஸ்ஸகுட்டியாராச்சிக்கு புலனாய்வு அறிக்கைகளை கசியவிட்டது யார்?
புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்த கருத்துக்கு சுசில் பிரேமஜயந்த பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், திஸ்ஸகுட்டியாராச்சிக்கு புலனாய்வு அறிக்கைகள் எவ்வாறு கசிந்தன என்பதை உடனடியாக ஆராய வேண்டும் என சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தினார். ஊடகங்களிடம் நேற்று பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது உண்மையில் ஆபத்தான ஒன்று. திஸ்ஸகுட்டியாராச்சி போன்ற ஒருவருக்கு புலனாய்வு அறிக்கைகள் எவ்வாறு கசிந்தன என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச புலனாய்வு சேவையை (SIS) கேட்டுக்கொள்கிறேன்.
கண்காணிப்பு பட்டியலில் இருக்க வேண்டியது என பெயர் அல்ல. புலனாய்வுப் பிரிவினர் இதைப் பற்றி ஆராய்ந்து, நாட்டில் நிலவும் பிரச்சினைகள், குறிப்பாக மக்கள் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கையிட வேண்டும்” என பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam

நீட் தேர்வை சரியாக எழுத முடியவில்லை, மன்னித்து விடுங்கள்.., கடிதம் எழுதிவிட்டு வீட்டை விட்டு சென்ற மாணவன் News Lankasri
