பசில் ராஜபக்சவுடன் ஒப்பிடும் போது விமல் வீரவங்ச யார்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவர் பசில் ராஜபக்ச எனவும் பசில் ராஜபக்சவுடன் ஒப்பிடும் போது விமல் வீரவங்ச யார் எனவும் பத்திரிகை சபையின் தலைவர் மகிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.
தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தவர்களில் ஒருவர் எனவும் விமல் வீரவங்ச, பொதுஜன பெரமுனவுக்கு எதிராகவே ஆரம்பித்ததில் இருந்து வேலை செய்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.
விமல் வீரவங்ச பேச்சாளர் மாத்திரமே, அவர் அரசியல்வாதி அல்ல. புண்ணியத்திற்கு அமைச்சரானவர். ராஜபக்சவினர் காரணமாக விமல் வீரவங்ச தற்போது அமைச்சராக இருக்கின்றார்.
சாகர காரியவசம், விமல் வீரவங்சவை விட பொதுஜன பெரமுனவுக்காக பாடுபட்டவர் எனவும் மகிந்த பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள வலையெளி தளம் ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.



