இந்த சிறுவனை கண்டுப்பிடித்தால் பரிசு இல்லை? நியூஸிலாந்து ஊடகமொன்று வெளியிட்டுள்ள பதிவு
இந்த புகைப்படத்தில் உள்ள சிறுவன் யார் என்று கண்டுபிடித்தால், பாிசுகள் இல்லை என்று நியூஸிலாந்தின் ஊடகமொன்று பதிவொன்றினை இட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நியூஸிலாந்தின் துணைப்பிரதமா் கிரான்ட் ரொபட்சன்( Grant Robertson ) அவருக்கு இன்று 50 வயதாகின்றது. அவர், தமக்கு கிடைத்த பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனது சிறுவயது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern ) தனது "அன்புள்ள நண்பர்" ரொபர்ட்சனுக்கு ஒரு சிறப்பு செய்தியுடன் படத்தை மறுபதிவு செய்துள்ளார்.
"இன்று எனது அருமை நண்பர் கிராண்ட் ரொபர்ட்சனின் 50வது பிறந்த நாள். கிராண்ட்டை இரண்டு தசாப்தங்களாக நான் அறிவேன். அவருடைய கடின உழைப்பையும், புத்திசாலித்தனத்தையும் அனைவரும் பார்க்கின்றார்கள்.,ஆனால் அவருடைய இரக்கத்தையும், நகைச்சுவையையும் நான் பார்க்கின்றேன்” என்று ஜசிந்தா ஆர்டெர்ன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்,நியூஸிலாந்தின் துணைப்பிரதமா் கிரான்ட் ரொபட்சன் நன்றி தெரிவித்து பதிவிட்ட சிறுவயது புகைப்படத்தை நியூஸிலாந்தின் ஊடகமொன்று பதிவிட்டு சிறுவன் யார் என்று கண்டுபிடித்தால், பாிசுகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்கள்.. முழு விவரம் இதோ Cineulagam