புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம்! வெளியான அறிவிப்பு
புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அடுத்த வாரம் புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் அறிவிக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியமனம்
அண்மையில் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் அதிகாரிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
எனினும் அது தொடர்பில், இறுதி தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை, புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பான நியமன பத்திரத்தை அடுத்த வாரம் அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி அனுப்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், அரசியலமைப்பு பேரவை கூட்டத்திற்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை.
குறித்த திகதி தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
சேவை நீடிப்பு
பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்றார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறவிருந்தார்.
எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவருக்கு நான்கு முறைகள் சேவை நீடிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




