தேசபந்து தென்னகோனுக்கு அடைக்கலம் வழங்கிய இருவர் கைது
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் இருவர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் போலிஸ் சிறப்பு பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் ஒருவரும், தலவத்துகொடை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தேசபந்து தென்னக்கோன் தற்பொழுது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மறைந்திருக்க உதவிய நபர்கள்
நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒருவருக்கு மறைந்திருக்க உதவியதாக இந்த இரண்டு சந்தேக நபர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னக்கோனுக்கு மறைந்திருக்க உதவிய நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri