அன்று சிங்கம் - இன்று நரி! முன்னாள் இராணுவத்தளபதி தொடர்பில் கடுமையாக சாடிய அமைச்சர்
சிங்கம்போல யுத்தத்தை முடித்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா, நாடாளுமன்றம் வந்த பிறகு நரிபோல செயற்படுகின்றார் என அமைச்சர் சீ.பீ ரத்னாயக்க (CP Ratnayake) விமர்சித்துள்ளார்.
நுவரெலியா, கொத்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் இன்று (09) ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) ஜனாதிபதியாக இருந்தபோது தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச்செயலாளராக செயற்பட்டார். இவர்களின் ஆதரவு இருந்ததால் அன்று சிங்கம்போல சரத்பொன்சேகா யுத்தத்தை முடித்தார்.ஆனால் நாடாளுமன்றம் வந்த பிறகு நரிபோல் செயற்படுகின்றார்.
பாரம்பரிய வைத்திய முறைமையை கொச்சைப்படுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். நாம் பாரம்பரிய வைத்திய முறைமையை மதிக்க வேண்டும். அன்று நாம் உர மானியம் வழங்கினோம். ஏன் அவ்வாறு செய்தோம்? விவசாயிகள், விவசாயத்தில் ஈடுபடுவது குறைந்தது. விவசாயிகளின் பிள்ளைகள் தொழிற்சாலைகளுக்கு சென்றனர்.
இதனால் அரிசியைக் கூட இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, விவசாயத்தை பாதுகாப்பதற்காகவே அந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதேவேளை, பால்மா, சீமெந்து உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும். அடுத்த வாரத்துக்குள் நிலைமை வழமைக்கு திரும்பும் என கூறியுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
