வருமானமற்ற நாடுகளில் முதலாம் அளவுக்கே திண்டாட்டம் : வருமானமிக்க நாடுகளில் ஆறு மடங்கு பூஸ்டா்கள்
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வழங்கப்படும் முதலாவது கொரோனாத் தடுப்பூசி அளவைக்காட்டிலும் ஆறு மடங்கு அதிகமான பூஸ்டர் மூன்றாவது தடுப்பூசிகள், உலகம் முழுவதும் நாளாந்தம் வழங்கப்படுதாக உலக உலக சுகாதார அமைப்பு தொிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த ஏற்றத்தாழ்வு "இப்போது நிறுத்தப்பட வேண்டிய ஊழல்" என்று அவா் தொிவித்துள்ளாா்.
இந்தநிலையில் தடுப்பூசிகளை பதுக்கி வைத்திருப்பதற்காக செல்வந்த நாடுகளை அவா் விமர்சித்துள்ளாா்.
உலகின் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் முதியவர்கள், முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆபத்து குழுவினருக்கு தடுப்பூசி போட போதுமான அளவுகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
ஜெர்மனி, இஸ்ரேல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பூஸ்டர் திட்டங்களை முன்னோக்கிக் கொண்டு செல்கின்றன.
ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னாவின் தடுப்பூசிகளைப் பெறுபவர்கள் மற்றும் ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட அனைவருக்கும் மூன்றாவது பூஸ்டர் அளவுகளை அண்மையில் அமொிக்கா அங்கீகரித்துள்ளது..
இதேவேளை வைரஸைத் தடுக்க தடுப்பூசிகள் மாத்திரம் போதாது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளாா்.
ஐரோப்பாவில் தொற்றுநோய்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகாித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவா், நெதர்லாந்தில் ஒரு பகுதியளவு முடக்கலை அறிவிக்கப்பட்டமையையும் சுட்டிக்காட்டியுள்ளாா்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
