கோவிட் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட அறிவிப்பு
கோவிட் பெருந்தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கோவிட் 19 வைரஸ் தொடர்ந்தும் உலக அவசர நிலைமை கிடையாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அட்னாம் தெரிவித்துள்ளார்.
கோவிட் 19 வைரஸ் பொதுச் சுகாதார அவசர நிலையாக கடந்த 2020ஆம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
2020ஆம் ஆண்டில் கோவிட் உலகம் முழுவதும் பெருந்தொற்றாக மாற்றமடைந்திருந்தது.
கோவிட் வைரஸ் குறித்த ஆபத்து நிலை
எனினும், இன்றளவிலும் சீனாவில் கோவிட் பெரும் தலைவலியாகவே காணப்படுகின்றது.
சீனாவில் கோவிட் கட்டுப்பாட்டை எதிர்த்து மக்கள் போராடியதனால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி ஏற்றுகை மற்றும் கோவிட்டின் வீரியம் குறைந்தமை உள்ளிட்ட காரணிகளினால் வைரஸ் குறித்த ஆபத்து நிலை குறைவடைந்துள்ளது.
எனவே கோவிட் அவசர நிலைமை அறிவிப்பினை வாபஸ் பெற்றுக் கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
