ஈழத்தமிழர்களை வீழ்த்திய பங்காளிகள் யார்? - அருட்தந்தை ஜெகத் கஸ்பர்
ஈழ தமிழர்களின் தேசியப் பரப்பில் ஆயும் தாங்கிய அரசியல் முற்றுப்பெற்றுள்ள நிலையில், ஆயுதம் தாங்காத போர் அதாவது அரசியல் இன்னும் முற்றுப்பெறாது தொடர்வதாக அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.
IBC தமிழின் பேசும் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். “தமிழர்கள் இறையாண்மை அரசை கொண்டிருந்தவர்கள். ஒரு இறையாண்மைக்கு தகுதியுடைய மக்கள்.
ஒரு தேசியம் எனும் வரையறைக்குள் வரக்கூடியவர்கள் தமிழ் மக்கள். ஆனால் காலணித்துவ ஆதிக்கத்திற்கு எதிரான போரில் நாங்கள் ஞானம் அற்றவர்களாக நடந்துகொண்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேயர்களை நம்பாது சிங்களவர்களை நம்பியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒருவேலை சிங்களவர்களை நம்பாமல் ஆங்கிலேயர்களை நம்பியிருந்தால் அன்றே தனி நாடு கிடைத்திருக்கும்.
எனினும் சிங்களவர்களின் வஞ்சகத்தால் நாங்களை அனைத்தையும் இழந்துவிட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



