முதன் முறையாக “தனிமைப்படுத்தலில்;” தளர்வை அறிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு!
முதன் முறையாக “தனிமைப்படுத்தலில்;” தளர்வை அறிவி;த்துள்ள உலக சுகாதார அமைப்பு! கொரோனாவுடன் போராடும் நாடுகள், சில சூழ்நிலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட நாட்களை குறைக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா தனிமைப்படுத்தல் காலம் தற்போது 14 நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எனினும் அத்தியாவசிய சேவைகளின் அழுத்தத்தில் உள்ள இடங்களுக்கு இந்த புதிய வழிகாட்டல்கள் உதவியாக இருக்கும் என்று சுகாதார அமைப்பு குறிப்;பிட்டுள்ளது.
இதன்படி சோதனையை மேற்கொள்ளாத ஒருவர் 14 நாட்களாக இருக்கும் தனிமைப்படுத்தல் காலத்தை 10 நாட்களாக குறைக்கலாம்.
அறிகுறியில்லாத ஒருவர்; தமது தனிமைப்படுத்தல் காலத்தை 10 நாட்களாக குறைக்கலாம் என்று சுகாதார நிறுவனம் குறிப்;பிட்டுள்ளது.
உலகளவில் ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால், பல நாடுகளின் தொடர்புத் தடமறியும் திறன் வேகமாக விரிவடைந்து வருவதை அடுத்தே இந்த பரிந்துரையை உலக சுகாதார நிறுவனம் செய்துள்ளது
இதேபோன்ற சூழ்நிலைகளில் தங்கள் தொடர்புத் தடமறிதல் நடவடிக்கைகளை தளர்த்துவது குறித்தும் நாடுகள் பரிசீலிக்கலாம் என்றும் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
இதேவேளை டென்மார்க் மற்றும் நார்வே உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே தங்கள் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டுள்ளன.
நெதர்லாந்தில், இந்த மாதத்தின் பிற்பகுதியில் பெரும்பாலான இடங்களில் முகக்கவசங்கள்;, சமூக விலகல் மற்றும் சுகாதார அனுமதிகள்; இனி தேவைப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒஸ்ரியா , சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியும் பெரும்பாலான கொரோனா தடைகளை நீக்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன. இதற்கிடையில், இங்கிலாந்தின் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன், இங்கிலாந்தில் உள்ள அனைத்து கொரோனா விதிகளும் மாத இறுதிக்குள் நீக்கப்படும் என்று கூறியுள்ளார்



