இந்திய அணியை சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு செய்த நியூஸிலாந்து!
இந்திய அணியை, அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றில், 3-0 என்ற அடிப்படையில் வெள்ளையடிப்பு செய்த முதல் அணி என்ற பெருமையை நியூசிலாந்து அணி பெற்றுள்ளது.
நியூசிலாந்தின் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை, கடந்த மாதம் இலங்கைக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த பின்னர் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
மும்பை வான்கடே மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து முதன்முறையாக வெற்றியை தனதாக்கியுள்ளது.
நியூஸிலாந்து அணி
நியூஸிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 235 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்ஸில் 174 ஓட்டங்களையும் பெற்றது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்ஸில் 121 ஓட்டங்களையும் பெற்றது.
இந்த தோல்வியால், உலக டெஸ்ட் செம்பியன்சிப் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை இழந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நெருங்கி வரும் நிலையில், அவுஸ்திரேலியா இப்போது தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
