யாழில் முன்னெடுக்கப்பட்ட வெள்ளை ஈயினைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம்
தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் வெள்ளை ஈயினைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு வாரங்கள் முன்னெடுக்கப்படும் மருந்து விசிறும் செயற்பாடு உரும்பிராய் கமநிலை சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தென்னை பயிர் சேவை சபை உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது விவசாய திணைக்களத்தின் மருந்து விசிறும் இயந்திரத்தின் உதவியுடன் தென்னை மரங்கள் காணப்படும் வீடுகளுக்கு குழுக்களாக செல்லும் தென்னைப் பயிர்ச்செய்கை சபையினர் மற்றும் கமநல சேவை உத்தியோகத்தர்கள் அனைத்து தென்னை மரங்களுக்கும் மருந்து விசிறும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டனர்.
மக்களிடம் கோரிக்கை
மருந்து விசிறும் நடவடிக்கையானது தென்னை பயிர்ச்செய்கையின் தலைவர் சுனிமால் ஜெயக்கொடி, தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் வட பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் ஆகியோரின் பங்குபற்றலுடன் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே குறித்த மருந்து தெளிக்கும் வேலைத்திட்டத்தினை பொதுமக்கள் தமது அனைத்து தென்னைகளுக்கும் மேற்கொள்ள தென்னைப் பரிட்சையை சபையுடன் இணைந்து செயற்படுமாறு தென்னைப் பயிற்சிகை சபையின் வடக்கு மாகாண முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் கேட்டுக்கொண்டார்.
கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினமும் மருந்து விசிறும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதால் பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குமாறும் தென்னை பயிர்ச் செய்கை சபை கேட்டுக்கொண்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
