கலிபோர்னியாவில் ஈரான் ட்ரோன் தாக்குதல் எச்சரிக்கை : மறுத்த வெள்ளை மாளிகை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தக்கூடும் என FBI விடுத்த எச்சரிக்கை, உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலின் அடிப்படையிலானது என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ஈரானில் இருந்து வரும் கடல்சார் கலன்கள் மூலம் கலிபோர்னியா மீது திடீர் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என கடந்த பெப்ரவரி ஆரம்பத்தில் எஃப்.பி.ஐ எச்சரிக்கை விடுத்திருந்தது.
அத்தகைய அச்சுறுத்தல் எதுவும் இல்லை
இந்த எச்சரிக்கை தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை இதனை மறுத்துள்ளது.

அத்துடன், கலிபோர்னியா பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில் இருந்த ஒற்றை, உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
"தெளிவாகச் சொல்லப்போனால், ஈரானிடமிருந்து நமது தாய்நாட்டிற்கு அத்தகைய அச்சுறுத்தல் எதுவும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை" என லெவிட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan