வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் போட்டியிடுவோம்: சாகர காரியவசம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடம் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்துகொள்ள அழைப்பு விடுத்தோம் என தெரிவித்துள்ளார்.
உள்ளூரட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது.
வெற்றியோ தோல்வியோ தேர்தலை எதிர்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான மூழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம்,
