டொலர் நெருக்கடியால் திணறும் இலங்கை! ஊசலாடும் பொருளாதாரம் - எங்கே தவறிழைக்கப்பட்டது?
நாட்டில் தற்போது பாரியதொரு டொலர் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது. வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்திருக்கின்றது.
ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து செல்கின்றது. சுற்றுலாத்துறை ஊடாக வருகின்ற டொலர் வருமானம் ஸ்தம்பிதமடைந்திருக்கின்றது.
வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற நிதியும் குறைவடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் ஸ்தம்பிதமடைந்திருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து புதிய கடன்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடன்களை மீள செலுத்துவதிலும் டொலர் பற்றாக்குறை காரணமாக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டொலர் நெருக்கடியினால் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து செல்கின்றன.
எனவே இது தொடர்பாக பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெளிவாக விபரித்துள்ளார்.
குறித்த நேர்காணலில்,
கேள்வி: டொலர் நெருக்கடி என்றால் என்ன? டொலர் நெருக்கடி எவ்வாறு ஏற்படுகின்றது?
பதில்: ஒரு நாடு வெளிநாடுகளுடன் தொடர்புகளை பேணும்போது, வர்த்தகம் செய்யும் போதும், ஒரு நாட்டில் இருக்கின்ற பிரஜை மற்றுமொரு நாட்டுக்கு சென்று தொழில் செய்து பணம் அனுப்புகின்ற போது, வெளிநாடுகளில் இருந்து கடன் பெறுகின்ற போது வெளிநாட்டு பணம் அதாவது அந்நிய செலாவாணி நாட்டுக்கு வரும். அது டொலராக இருக்கலாம். அல்லது வேறு சர்வதேச நாடுகளின் நாணயங்களாக இருக்கலாம்.
எனினும் டொலர் நாணயங்களே சர்வதேச நாடுகளில் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படுகின்றது. அதனால் தான் அது பற்றி பேசப்படுகின்றது. நாட்டில் டொலரின் அளவு ஏற்றுமதி மற்றும் ஏனைய டொலர் வரும் மூலங்கள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது. அதே போன்று இறக்குமதி செய்தல், பெற்ற கட்ங்களை மீள செலுத்துதல் போன்ற பல காரணங்களினால் டொலர் நாட்டிலிருந்து வெளியே செல்கின்றது.
உள்வரும் அளவு கூடுதலாகவும் வெளி செல்லும் அளவு குறைவாகவும் இருந்தால் அது சாதக நிலையை காட்டும். மறுபுறம் டொலர் உள் வருகை குறைவாகவும் வெளியே செல்வது கூடுதலாகவும் இருக்கும் பொழுது அங்கெ ஒரு பற்றாக்குறை ஏற்படுகின்றது. அந்த பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து செல்லுமாக இருந்தால் அந்த சந்தர்ப்பத்தை நாங்கள் நாட்டின் டொலர் நெருக்கடி என விபரிக்க முடியும். அதாவது டொலர் உள் வருகை குறைந்துள்ளது, வெளி செல்தல் கூடியுள்ளது.
எனவே டொலர் நெருக்கடி என கூறும் போது ஒரு நாட்டில் இருக்க கூடிய, ஒரு நாடு கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய டொலர்களின் அளவில் குறைவை காட்டுகின்றது. அதனடிப்படையிலேயே தற்போது டொலர் நெருக்கடி நாட்டில் ஏற்ப்பட்டுள்ளது.
கேள்வி: அப்படியென்றால் டொலர் பற்றாக்குறை ஏற்ற்படும் போது அது ரூபாவின் பெருமதி வீழ்ச்சியடைந்து விடுகிறது என்று கூட பொருள்படுமா?
பதில்: அதனை அப்படியே கூற முடியாது. அரசாங்கத்தின் சில தீர்மானங்களும் ரூபாவின் பெறுமதியை தீர்மானிக்கின்றன. டொலர் நெருக்கடி தற்காலிகமாக கூட ஏற்ப்படலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் எதிர்பாராதவிதமாக டொலரின் கேள்வி அதிகரிக்கலாம். அல்லது திடீர் என்று வீழ்ச்சி ஏற்ப்படலாம். ஆனால் நீண்ட காலத்திற்கு இவ்வாறு டொலர் குறைவடைந்து கொண்டு செல்லும் போதுதான் அது ஒரு நெருக்கடியாக ஒருவாகின்றது. அப்போது ரூபாவின் பெறுமதி நிச்சியமாக வீழ்ச்சியடையும்.
கேள்வி: டொலர் நெருக்கடி ஏற்படும் போது நாட்டிற்கு ஏற்படுகின்ற பொருளாதார பாதிப்புகளை விபரிக்க முடியுமா?
பதில்: டொலர் நெருக்கடி ஏற்படும் போது அந் நாட்டின் வெளிநாட்டு வர்த்தக நம்பக தன்மை பாதிக்கப்படும். மருந்து, எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய டொலர் தேவையாகும்.
நாட்டின் டொலர் கையிருப்புக்களை கொண்டு எத்தனை மாததிற்கு தேவையான இறக்குமதிகளை செய்ய முடியும் என்பதை அடிபடையாக வைத்தே அந்த நாடு சர்வதேச வர்த்தகத்தில் நல்ல நிலைமையில் இருகின்றதா என்பதை பார்க்கலாம்.
குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு டொலர் கையிறுப்பு நாட்டில் இருந்தால் அது நாட்டுக்கு நல்ல நிலைமையாகும்.
மாறாக இரண்டு மாதகங்கள் அல்லது இரண்டு வாரங்களுக்கு தேவையான அளவுக்கு தான் டொலர் இருகின்றன என்றால் அது நெருக்கடியான நிலைமையை காட்டும். இதன் காரணமாக பொருள் இறக்குமதி செய்வதற்கு டொலர் இருக்காது. இறக்குமதி வரையறை செய்யப்படும். இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கும்.
அது மேலும் நெருக்கடியை தோற்ற்விக்கும். ஏற்றுமதி உற்பத்தி செலவு அதிகரிப்பால் ஏற்றுமது வருமானமும் பாதிக்கபடும். நாட்டின் உள் நாட்டு உற்பத்தியும் பாதிக்கப்படும். அதேவேளை ஏற்கனவே இலங்கைக்கு கடன்கொடுத்தவர்களும், கடன் கொடுக்க இருப்பவர்களும் இதை மோசமான நிலையாக பார்ப்பதுடன் ஏற்கனவே கடன் கொடுத்தவர்கள் விரைவாக விரைவாக தமது கடஙளை மீள பெற்றுகொள்ள முயற்சிப்பார்கள்.
புதிய கடங்களை கொடுக்க சர்வதேசம் தயங்கும். மேலும் நாட்டுக்குள் இருகின்ற வெளிநாட்டு முதலீட்டாலர்கள் உடனடியாக தமது முதலீடுகளை வெளி நாடுகளை நோக்கி சொண்டு செல்ல முயற்சிப்பார்கள். இது மிகப்பெரிய ஒரு பிரச்சினையை கொண்டுவரும். அதேபோன்று நாட்டுக்குள்ளே டொலர்களை கொண்டுவர விரும்புபவர்கள் கூட அதனை செய்ய விரும்பமாட்டார்கள்.
சர்வதேச முதலீட்டாலர்களும் முதலீடுகளை நட்டுக்குள் கொண்டுவர தயங்குவார்கள். இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கபடுவதால் இரக்குமதி உள்ளீடுகளில் தங்கியிருகின்ற ஏற்றுமதி பாதிக்கப்படும்.உதாரணதிற்கு ஆடைத்தொழிலை குறிப்பிடலாம்.
அதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டி இருகின்றது. இறக்குமதி உள்ளீடுகள் தங்கியிருக்கின்ற பல ஏற்றுமதிகள் காணப்படுகின்றன. உதாரணமாக எரிபொருள் இறக்குமதி செய்ய டொலர் அவசியமாகும். எனவே டொலர் நெருக்கடி ஏற்பட்டு எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டால் அது நாட்டில் எவ்வாறான பொருளாதார தாக்கத்தினை ஏற்ப்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதாவது எரிபொருள் விலை அதிகரித்தாலே நாட்டின் போக்குவரத்தும் உற்ப்பத்தி உள்ளிட்ட சகல துறைகளும் பாதிக்கப்படும். இந்திலையில் டொலர் நெருக்கடியினால் எரிபொருள் இறக்குமதி செய்வது தடைப்பட்டால் என்ன நடக்கும்? உதாரனமாக சில காலங்களுக்கு முன்னர் லிபியாவில் இதே பொன்று ஒரு நெருக்கடி ஏற்பட்டபோது வாகனங்கள் நூற்ற்க்கணக்கில் எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் நாட்கணக்கில் நிருத்திவைக்கப்பட்டிருந்தன. அந்நாட்டின் தொழில்துறைகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.