பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளினால் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து கல்வி மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
எனினும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,பாடசாலை செல்லும் மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பெற்றோர்களுக்கு அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் திகதிகள் மற்றும் இடங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
