இலங்கையில் திடீரென கோவிட் தொற்றாளர்கள் குறைய காரணம் என்ன?
இலங்கையில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளது.
PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையினால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் திடீரென குறைவடைந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடும் பணிகளில் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளமையினால் PCR பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 800 - 900 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 500 இற்கும் குறைவான தொற்றாளர்களே அடையாளம் காணப்படுகின்றனர்.
பல இடங்களில் PCR பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.மேலும் எடுக்கப்பட்ட PCR பரிசோதனைகள் முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை.
3 - 10 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் இன்னமும் கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 43 நிமிடங்கள் முன்

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
