ஜனாதிபதி கையில் அணிந்திருக்கும் சிகப்பு நூல்! காரணம் என்ன?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa ) மீண்டும் ஞானக்கா என்ற பெண்ணின் ஆலோசனைக்கு அமைய செயற்பட ஆரம்பித்துள்ளதாக அரசியலில் அவருக்கு நெருக்கமான தரப்பினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஞானக்கா என்பவரின் ஆலயத்தில் வழங்கப்படும் சிகப்பு நூலை ஜனாதிபதி தனது இடது கையில் அணிய ஆரம்பித்துள்ள விதத்தை அண்மையில் ஜனாதிபதி உடுபத்தாவ விவசாய பண்ணையை பார்வைிட சென்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் காணமுடிகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவருக்கு நெருக்கமான பலரும், அனுராதபுரத்தில் ஆலயம் ஒன்றை நடத்தி வரும் ஞானக்கா என்பவரின் பக்தர்கள் எனவும் அந்த பெண்ணின் ஆலோசனைக்கு அமையவே நாடு நிர்வாகம் செய்யப்படுவதாகவும் கடந்த காலங்களில் சமூக ஊடகங்கள் வழியாக பரவலாக பேசப்பட்டு வந்தது.
இதனையடுத்து ஜனாதிபதி தனது கையில் கட்டியிருந்த சிகப்பு நூலை அப்புறப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் அந்த சிகப்பு நூலை அணிந்திருப்பதை காணக் கூடியதாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri