இலங்கையில் மின்நெருக்கடி ஏற்பட்டமைக்கான பிரதான காரணம் என்ன?
இலங்கையில் 2015ஆம் ஆண்டின் பின்னர் பாரிய அளவிலான மின் நிலையங்கள் அமைக்கப்படாததன் விளைவுகளுக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வலுசக்தி தொடர்பான பொறியியலாளர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
1995ஆம் ஆண்டளவில் 100 சதவீதமாக காணப்பட்ட நாட்டின் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தித்துறையின் பங்களிப்பு தற்சமயம் பாரிய அளவில் குறைவடைந்திருக்கிறது.
2030ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தியின் மூலம் நாட்டின் 70 சதவீதமான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்கான தேவை ஏற்பட்டிருப்பதாகவும் திலக் சியம்பளாபிட்டிய கூறினார்.
தற்போது எரிபொருள் மற்றும் போதிய நீர்வீழ்ச்சி இன்மையால் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடாளவிய ரீதியில் மின்விநியோக தடை ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
