தொடர்ந்து அதிகரிக்கும் கோவிட் தொற்றாளர்கள்! நாட்டின் தற்போதைய நிலை என்ன
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுள்ளதால் கோவிட் நோயாளர்களை அடையாளம் காணுதல் அவர்களின் முதல்நிலை தொடர்பாளர்களை அடையாளம் காணுதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இலகுவாக இருந்தாலும் கோவிட் நோயாளர்களில் எவ்வித வீழ்ச்சியும் காணமுடியவில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அத்தோடு, கொழும்புக்கு அப்பால் ஏனைய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்கும் பட்சத்தில் அங்கு அதிக எண்ணிக்கையிலான கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
கோவிட் தொற்றுப்பரவல் குறைவடைந்துள்ளதாக எங்களுக்குத் தெரியவில்லை. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் கோவிட் நோயாளர்களை அடையாளம் காணுதல் அவர்கள் முதல்நிலை தொடபாளர்களை அடையாளம் காணுதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இலகுவாக இருந்தாலும் கோவிட் நோயாளர்களில் எவ்வித வீழ்ச்சியையும் காண முடியவில்லை.
பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளதை எங்களால் காண முடிகின்றது. பிசிஆர் பரிசோதனைகளை அதிகரித்து எழுமாறான பிசிஆர் பரிசோதனைகளையும் முன்னெடுத்தால் ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் கோவிட் நோயாளர்களில் வீழ்ச்சி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.
மேலும், கோவிட் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் ஊடாக கோவிட் தொற்றில் வீழ்ச்சி ஏற்படவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
இதேவேளை, தொழிற்சாலைகள் நிறுவனங்களில் தொழில் புரிவோருக்கு மத்தியில் அடையாளம் காணப்படும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.