வெப்பம் மேலும் அதிகரிக்கும்! இன்றைய நிலவரம் குறித்து இலங்கை மக்களுக்கு மீண்டும் கடுமையான எச்சரிக்கை
இன்றைய தினம், 8 மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய அளவிலேயே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாளை காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சாதாரண வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் மக்களுக்கான அறிவிப்பு
இது குறித்து சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, வெப்பநிலை அதிகரித்திருக்கும் போது நீங்கள் வெளியில் வேலை செய்யும் நபராக இருந்தால், நீங்கள் கடுமையான நடவடிக்கைகளை மட்டுப்படுத்த வேண்டும்.
மேலும், வெளியில் வேலை செய்பவர்கள் நிழலில் தங்கி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் பணியிடத்தில் இருந்தால், நிறைய தண்ணீர் குடித்துவிட்டு முடிந்தவரை நிழலில் ஓய்வெடுங்கள்.
வீடுகளில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும், சிறு குழந்தைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
