கடந்த காலத்தில் இந்த அரசாங்கம் சொன்னது என்ன..! திருகோணமலையில் அடையாள உண்ணாவிரத போராட்டம்
கடந்த காலத்தில் இந்த அரசாங்கம் சொன்னது என்ன? ஜனாதிபதி தேர்தலில் சொன்னபடி செய்தார்களா என்ற அடிப்படையில் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று (26) இடம்பெற்றது.
திருகோணமலை மக்கள் சமூக செயற்பாட்டாளர் உண்ணாவிரத வேந்தன் இதனை ஏற்பாடு செய்தார்.
ஏழு கோரிக்கைகள்
இதில் பிரதானமாக ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு தீர்வு கோரியும் உண்ணாவிரதம் இருந்தனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட வெடி மருந்து மற்றும் சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர் இதனை தடை செய்ய வேண்டும், அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், செம்மனி மனித புதை குழியில் 500 க்கும் மேற்பட்ட எலும்பு கூடுகள் எடுக்கப்பட்டன உரிய விசாரணை இதற்காக தேவை இதனை செய்தீர்களா?,
மந்த கதியில் இடம் பெறும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை துரித விசாரணை இடம் பெற வேண்டும், வடகிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாகாண சபை தேர்தல்களும் இடம் பெற வேண்டும், நாட்டின் அனைத்து பிரதேசத்தையும் போதையற்ற நாடாக மாற்ற வேண்டும் இதனை செய்தீர்களா என பல்வேறு தரப்பட்ட கேள்விகளை முன்வைத்து அரசாங்கத்திடம் கோரிக்கையாக முன்வைத்து என்றும் தெரிவித்திருந்தனர்.




1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam