சேர் என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி
யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த விசாரணைகளுக்கு அமைய, தங்களது சமர்ப்பணங்களை யாழ். நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் வைத்தியத்துறையானது முன்னைய காலங்களில் பலராலும் பேசப்பட்டு வந்ததாக இருந்தாலும் தற்போது பலரது எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலே வைத்தியத்துறை மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் பிரித்தானியாவில் பணியாற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சதானந்தன் ஆகியோர் இன்றைய லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,