தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(23) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.
இன்றைய தங்க விலை
நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 771,253 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 27,210ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 217,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 24,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 199,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 23,810 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 188,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
செட்டியார் தெரு விபரங்கள்
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 210,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 193,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |