பாடசாலை மாணவர்களுக்கான விசேட உதவித் தொகை: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களில் ஒரு குழுவிற்கு மட்டும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக கொடுப்பனவு வழங்கும் திட்டம் நியாயமற்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காப்பீடு செய்யாத பயனாளிகள் மற்றும் காப்பீடு செய்யாத குழந்தைகளுக்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்குவதற்கு பதிலாக, அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 06 வீதத்தை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மங்கள மத்துமகே தெரிவித்துள்ளார்.
6,000 ரூபா உதவித்தொகை
அஸ்வெசும பெறும் பெற்றோர்களது மற்றும் விசேட காரணங்களுக்காக சிறுவர் இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்காக பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை ஒன்றை வழங்க அரசாங்கம் கடந்த 3ஆம் திகதி தீர்மானித்திருந்தது.
இதன்படி எதிர்வரும் பாடசாலை தவணையில் இருந்து இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில், பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு கடந்த 02 அனுமதி கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 38 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
