பிரதமர் பதவி குறித்து மஹிந்த நுவரெலியாவில் வைத்து எடுத்த தீர்மானம் என்ன?
பிரதமர் பதவி குறித்து தற்போதைய பிரதமர் மஹிந்த ராபஜக்ச அண்மையில் நுவரெலியாவில் வைத்து முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
புத்தாண்டில் அரசாங்கத்தில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் பதவி உள்ளிட்ட அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் இடம்பெறும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச விரக்தியடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக அண்மையில் அவர் நுவரெலியாவிற்கு சென்று ஓய்வு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிருப்தி காரணமாக பிரதமர் மஹிந்த அமைச்சரவை கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டால் அந்தப் பதவியை பசில் ராஜபக்சவிற்கு வழங்குமாறு யோசனைகள் முன்மொழியப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan