இலங்கை முழுவதும் இன்று மின்சாரம் தடைப்பட்டமைக்கான காரணம் என்ன?
இலங்கை முழுவதும் இன்று ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது நாசவேலையின் விளைவினால் ஏற்பட்டதல்ல என இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய மின்சார தடையானது, இயற்கையான நிகழ்வுகளினால் ஏற்பட்டதென சங்கத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நுரைச்சோலையில் இரண்டு நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களும் செயலிழந்துள்ளதாகவும், அனைத்து மின் உற்பத்திகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும், ஒரு நிலக்கரி மின் நிலையம் தற்போது வரையில் பழுது பார்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்தையில் உள்ள மின்சார ஜெனரேட்டர்களும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார சபை அதிகாரிகள் நிலைமையை கண்கானித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் மின்சார விநியோகம் முழுவதும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. நாட்டில் முழுமையான மின் உற்பத்தி முறை இன்னமும் செயற்படவில்லை என தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் வேளையில் நாடாளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சாரம் தற்போது படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
