கொழும்பிலிருந்து விடுமுறையில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்
பிபிலை - மொனராகலை வீதியில், கனுல்வெல பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்த வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனியார் பேருந்தொன்றில் மோட்டார்சைக்களில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவில், கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றி வந்துள்ளதாக தெரியவருகிறது.
35 வயதான பலபிட்டியலியனகே தனுஷ்க குமார பியதாச என்ற இந்த பொலிஸ் உத்தியோகத்தர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் விடுமுறையில் கொழும்பில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே, இந்த விபத்து நேர்ந்துள்ளது. கதிர்காமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் மோட்டார்சைக்கிள் மோதியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் பேருந்து சாரதியை கைது செய்துள்ளனர்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
