நாம் என்ன தவறு செய்தோம்! ஒரு குடும்பத்தின் வேதனைக் குரல் (Photo)
அப்பாவி பொதுமக்களின் வீடுகளுக்கு தீ வைக்காமல் நிதானத்தை கடைப்பிடிக்குமாறு நீர்கொழும்பில் பாதிக்கப்பட்ட தம்பதியர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர்கொழும்பில் வசிக்கும் குறித்த தம்பதிகளின் வீடு சூறையாடப்பட்டதுடன், தங்க நகைகள், ஆடைகள், புத்தகங்களுடன் கூடிய பாடசாலைப் பைகள் என்பன திருடப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையின் போது குறித்த வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது.
கொழும்பில் காலி முகத்திடலில் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் தாங்கள் பங்குகொண்டதாகத் தெரிவித்த தம்பதியினர், இந்த பிரச்சினைக்கு வன்முறை தீர்வாகாது எனவும் தெரிவித்தனர்.
வீடுகள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் அச்சத்தை ஏற்படுத்தி, பல குழந்தைகளை கடுமையாக பாதித்துள்ளதால், குழந்தைகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
எந்த அரசியல்வாதிகளுடனும் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்திய தம்பதியினர், நாம் என்ன தவறு செய்தோம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறித்த நபர் ஒரு மதப் போதகர் என்றும் தாங்கள் மிஷனரி சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தள்ளனர்.


உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
