அதிக அபாயத்தில் மேல் மாகாணம்
நாட்டில் கோவிட் தொற்றக்குள்ளானோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.
கோவிட் தொற்று பரவலில் முதலாம் அலை தொடக்கம் தற்போது வரை மேல் மாகாணமே அதிக அபாயமுடைய பகுதியாக தொற்று நோயியல் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டமே கூடுதல் அபாயம் மிக்க மாவட்டமாகக் காணப்படுகின்றது.
இம் மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 100,549 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 68252 பேர் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதியின் பின்னர் ஆரம்பமான புத்தாண்டு கொத்தணியில் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களாவர்.
இதேபோன்று கம்பஹா மவட்டத்தில் 81,968 தொற்றாளர்களும் களுத்துறையில் 44,715 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam