வரலாற்றில் முதன்முறையாக கிரிக்கெட் உலககோப்பைக்கான வாய்ப்பை இழந்த அணி
வரலாற்றில் முதன்முறையாக மேற்கிந்தியத் தீவுகள் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.
ஸ்காட்லாந்திடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேற்றையதினம் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியை சந்தித்ததிலிருந்து , எதிா்வரும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.
ஐசிசி-யின் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டது முதல் அதில் விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள், வரலாற்றிலேயே முதல் முறையாக தற்போது அந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறது.
அந்த அணி, 1975, 1979 ஆகிய எடிஷன்களில் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
பிராந்திய மனப்பான்மை
இன்னும் இரு போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எஞ்சியிருக்கும் நிலையில், அதில் வென்றாலும் அந்த அணி 4 புள்ளிகளையே எட்டும்.
ஆனால், அதற்கு மேல் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் 6 புள்ளிகளுடன் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விடயம் குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் கிரிக்கெட் வீரர்கள் தங்களது பிராந்திய மனப்பான்மையை விடுத்து ஒரு அணியாக ஒன்றிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் போட்டியிலிருந்து வெளியேறியதால் இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகளுக்கு இடையே முதல் இரண்டு இடங்களை பிடித்து உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்காக கடும் போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |