முன்பள்ளிக்கு சென்ற மாணவியும், அவருடைய தந்தையும் விபத்தில் சிக்கி படுகாயம்
மட்டக்களப்பு நகரில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளிக்கு சென்ற மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியுடன், தனியார் போக்குவரத்து பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற தந்தையும், அதில் பயணம் செய்த முன்பள்ளி மாணவியுமே படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பேரு்நதும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமைய போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 6 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri