தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவுப் பாதைகள் குறித்து வெளியான அறிவிப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவுப் பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவுப் பாதைகள் வெள்ள நீரில் மூழ்கியிருந்தது.
தற்காலிகமாக மூடப்பட்ட பாதை
இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் அமைந்துள்ள அளுத்கம - மத்துகம வீதி வெள்ள நீரில் மூழ்கியதன் காரணமாக, கொழும்பு நோக்கி நுழையும் வாயில், கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் வெளியேறும் வாயில் மற்றும் காலியிலிருந்து வரும் வாகனங்கள் வெளியேறும் வாயில் என்பன தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

சொகுசு வாகனங்கள் மற்றும் சிறிய ரக வாகனங்களின் போக்குவரத்து இதன்காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
தற்போது வெள்ள நீர் வடிந்துள்ளமையால், அனைத்து வாகனப் போக்குவரத்துகளுக்காகவும் வெலிபென்ன இடைமாறல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.