வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்
வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் ராஜகிரியப் பகுதியில் கைது செய்யப்பட்ட சீன நாட்டினரின் கடவுச்சீட்டுகளைத் திருப்பித் தருவதற்காக ஒவ்வொருவரிடமும் தலா மூன்று இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
சந்தேக நபர், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri