மாத்தறை மாவட்டத்தில் வேகமாகப் பரவி வரும் 'வெலிகம விண்ட்'நோய்
மாத்தறை மாவட்டத்தில் 'வெலிகம விண்ட்' (Weligama Wint) எனப்படும் தென்னையின் வேர் வாடல் நோய் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, இந்த நோயைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், சுமார் 5,000 தென்னை மரங்களை வெட்டி அழிக்க தென்னைப் பயிர்ச்செய்கை சபை முடிவு செய்துள்ளது.
ரெண்டா மக்குன (Renda Makuna) என்று உள்ளூரில் அழைக்கப்படும் ஊடுருவும் பூச்சி இனத்தால் ஏற்படும் இந்தக் நோய், மாவட்டத்தில் ஏற்கனவே சுமார் 6,250 மரங்களைப் பாதித்துள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி, தெரிவித்தார்.
காத்தான்குடியில் முன்னாள் ஆயுததாரியால் தமிழ்பேசும் பௌத்த துறவிக்கு நேர்ந்த கதி! அம்பலமாகும் ஆதாரங்கள்
தேங்காய் உற்பத்தி
"இந்த நோய் கடந்த 15 ஆண்டுகளாகத் தென் மாகாணத்தில் தென்னைப் பயிர்ச்செய்கைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இதன் பரவல் நாட்டின் மற்ற பகுதிகளுக்குத் தடுக்கப்பட்டுள்ளபோதிலும், தெற்கில் இது தொடர்ந்து ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது," என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மரங்கள், தேங்காய்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்குள் இறந்து விடுகின்றன.
நோய்ப் பரவல்
ஏனெனில், நோய்க்குக் காரணமான பாக்டீரியாவைச் சுமந்து செல்லும் பூச்சிகள் மூலம் இது எளிதில் பரவுகிறது என்றும் அவர் விளக்கினார்.

"இதுவரை, நோயின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 325,000 தென்னை மரங்களை நாங்கள் வெட்டி அகற்ற வேண்டியிருந்தது.
மாத்தறையில் உள்ள பாதிக்கப்பட்ட 6,250 மரங்களில், தற்போது 5,000 மரங்களை அகற்றத் திட்டமிட்டுள்ளோம்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam