சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாம்..! வெளியான அறிவிப்பு
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை கொழும்பு குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஆறு சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டாம் என்று சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
வெலிகம துப்பாக்கிச்சூடு
இதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பின்னர் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக, பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
