மக்களுக்கு நாளை வழங்கப்படும் கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 15 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை திங்கட்கிழமை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை(29.08.2023) முதல் பயனாளிகள் வங்கிகளில் பணத்தினை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
(1/3) Out of the 15 lakh beneficiaries who have been selected, the welfare benefits board will disburse money related to the month of July to the banks on Monday for the 8 lakh beneficiaries whose information has been confirmed correctly. pic.twitter.com/GWp52IkTW1
— Shehan Semasinghe (@ShehanSema) August 27, 2023
இதேவேளை தகவல்கள் விரைவாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், மீதமுள்ள பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
மேலும் தவறான தகவல் அளித்து சலுகை பெற்றவர்கள் இருப்பின், பெறப்பட்ட பணத்தை மீட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க நலன்புரி நன்மைகள் சபை செயற்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பிலான ஆராய்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது நிறைவடைந்தவுடன் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தகுதியுடைவர்களுக்கு கட்டாயம் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |