அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்த தயாராகும் விமல் வீரவங்ச
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு பின்னர் நடத்திய மகிந்த காற்று என்ற தலைப்பிலான மாபெரும் பொதுக் கூட்டத்தை போன்ற பொதுக் கூட்டத்தை நுகேகொடை நகரில் நடந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையில்10 கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கான திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்ற போதிலும் எதிர்வரும் 29 ஆம் திகதி இந்த பொதுக் கூட்டம் நடத்தப்படலாம் என 10 கட்சிகளுக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இதனை தவிர அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்த கட்சிகள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி, அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைத்தனர் என்ற காரணத்தினால், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam