கூலி ஆட்களை பயன்படுத்தி வீரவங்ச முகநூல் மூலம் சேறுபூசுகிறார்! - சாகர காரியவசம்
கூலி ஆட்களை பயன்படுத்தி முகநூல் மூலம் சேறுபூசி அரசியல் பயணத்தை முன்னெடுக்கலாம் என விமல் வீரவங்ச நினைத்தாலும் தாம் அப்படி நினைக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறகையில், விமல் வீரவங்ச, தனது கூலி ஆட்களை பயன்படுத்தி முகநூல் மூலம் எமக்கு எதிராக சேறுபூசும் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளார்.
இவ்வாறு சேறுபூசி அரசியல் பயணத்தை முன்னெடுக்கலாம் என அவர் நினைக்கின்றார். ஆனால், நாங்கள் அப்படி நினைக்கவில்லை.
விமல் வீரவங்ச காணும் கனவுக்கு அமைய எமது தோட்டத்தின் வாசலில் இருக்கும் முருங்கை மரத்தை வெட்ட இடமளிக்க போவதில்லை. கட்சியின் செயலாளர் என்ற வகையில் நான் வெளியிட்ட கருத்தை கட்சியின் தலைவர் எப்போதும் நிராகரிக்கவில்லை.
முழு கட்சிக்காகவே நான் விமல் வீரவங்சவின் கருத்துக்கு எதிராக குரல் கொடுத்தேன் என குறிப்பிட்டுள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
