என்னை கடலில் போட்டு கொலை செய்ய முயற்சித்தனர் - வெதினிகம விமலதிஸ்ஸ தேரர்
எமது மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள தன்னை கடலில் போட்டு கொலை செய்ய முயற்சித்ததாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த சதித்திட்டத்தில், அத்துரலியே ரதன தேரர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அத்துரலியே ரதன தேரருக்கு பெற்று கொடுப்பதற்காக டிரான் அலஸ் வீட்டில் வைத்து கடிதத்தில் பலவந்தமாக கையெழுத்தை பெற்றதாகவும் விமலதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எமது மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அத்துரலியே ரதன தேரர், தேசபந்து தென்னகோன், டிரான் அலஸ் ஆகியோர் கொள்ளையிட்டனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan