இலங்கையில் திருமணங்களை நடத்துவது குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு
நாளை நள்ளிரவு முதல் வீடுகளில் அல்லது மண்டபங்களில் திருமண வைபவங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் திருமணங்கள் தொடர்பில் இன்றைய தினம் மற்றுமொரு அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பதிவு திருமணத்தை நடத்துவதாயின் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் விளக்கமளிக்கையில்,
மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும்.
இதனைத் தவிர்த்து வேறு எவருக்கும் இதன்போது பங்கேற்க அனுமதி இல்லை.
இதேநேரம், இன்று முதல் தனிமைப்படுத்தல் உத்தரவை மிகவும் கடுமையாக அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைவரும் அதற்கமைய செயற்படுவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
