கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
களனி கங்கையின் நடுப்பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களனி கங்கை மற்றும் கலா ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கும் சாத்தியகூறுகள் காணப்படுவதால் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளநிலை ஏற்படும் சாத்தியகூறுகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
கலா ஓயா பள்ளத்தாக்கின் மேல் மற்றும் மத்திய பகுதிகளின், சில பகுதிகளில் இதுவரை கணிசமான மழை பெய்துள்ளது.
10,000 கனஅடி நீர்
மேலும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாகவும், தற்போதைய நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 90 ஆக உள்ளதால், இன்று பிற்பகல் இந்த அளவை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களில் நொச்சியாகம, ராஜாங்கனை, வனாதவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட கலா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கணிசமான மழைவீழ்ச்சி
இதேவேளை, இன்று காலை 10.00 மணியளவில் களனி கங்கையின் நடுப்பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களில், களனி கங்கை பள்ளத்தாக்கின் சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பயகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri