சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அசௌகரியம் - செய்திகளின் தொகுப்பு
சீரற்ற வானிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாலைதீவிலிருந்து பயணித்த, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 116 என்ற விமானமும், சென்னையில் இருந்து பயணித்த யூ.எல். 128 என்ற விமானமும் மற்றுமொரு விமானமும் மத்தளவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில், வானிலை சீரானதை அடுத்து, குறித்த விமானங்களின் பயணிகள் அனைவரும், மீளவும் கட்டுநாயக்கவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,




